தமிழ்நாடு

"வீட்டை விட்டு வெளியேவந்தா குடையுடன் வாங்க"... இன்னும் 2 நாட்களுக்கு மழை: எச்சரிக்கும் வானிலை மையம்!

சென்னையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

"வீட்டை விட்டு வெளியேவந்தா குடையுடன் வாங்க"... இன்னும் 2 நாட்களுக்கு மழை: எச்சரிக்கும் வானிலை மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலை திடீரென இருள் மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. விடுமுறை நாள் என்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை.

முன்னதாக இன்று காலையிலேயே சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவித்தது. இதையடுத்து இன்று மாலை முதலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மேலும் சென்னையின் அடுத்த 48 மணி நேரத்திற்கு பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வான பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories