தமிழ்நாடு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு செப். 30-ம் தேதி வீட்டிற்கு முன்பு 8 வயது சிறுமி குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாட்ராயன் எனும் 72 வயது முதியவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியை காணாத பெறரோர் தேடியபோது நாட்ராயன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்ட பெற்றோர், அச்சிறுமியை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பெயரில் அரவக்குறிச்சி காவல் நிலைய போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ வழக்குப் பதிவு செய்து நாட்ராயனை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, நாட்ராயனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், அபராத தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

banner

Related Stories

Related Stories