தமிழ்நாடு

மனு கொடுத்த 4 நாளில் நடவடிக்கை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உதவியால் நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்!

புகார் அளித்த நான்கு நாள்களில் நிவாரணம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.

மனு கொடுத்த 4 நாளில் நடவடிக்கை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உதவியால் நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய பகுதி, பூசலப்புரம் கரடிக்கல் கிழவனேரி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராக்கம்மாள், பிச்சாண்டி, ஆசைத்தம்பி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிப்பிரிவுக்கு கடந்த 30ம் தேதி புகார் மனுவை அனுப்பப்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி கிராமசபை கூட்டத்திற்காக தமிழக முதல்வர் மதுரை பாப்பாபட்டி வந்தபோது செக்கானூரணி பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தங்களது குறைகளை அடங்கிய புகார் மனுவை மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ளனர்.

மனு கொடுத்த 4 நாளில் நடவடிக்கை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உதவியால் நெகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்!
Jana Ni

மனு அளித்த நான்கே நாளில் மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள சிறப்பு இருசக்கர வாகனத்தை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தி.மு.க அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

அதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி ராக்கம்மாள் தமிழக முதல்வரிடம் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தது எங்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வருக்கும், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இவ்விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் மகளிர் அணி அமைப்பாளர் தங்கபாண்டியன் நகர பொறுப்பாளர் முருகன் அவை தலைவர் நாகராஜ் ஏராளமானோர் பங்கேற்றனர்

banner

Related Stories

Related Stories