தமிழ்நாடு

குளிர்பானம் என நினைத்து மது குடித்த குழந்தை பலி.. அதிர்ச்சியில் தாத்தா உயிரிழப்பு: வேலூரில் நடந்தது என்ன?

குளிர்பானம் என நினைத்து மது குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்பானம் என நினைத்து மது குடித்த குழந்தை பலி.. அதிர்ச்சியில் தாத்தா உயிரிழப்பு: வேலூரில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டம், திருப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் நேற்று முன்தினம் இரவு மதுவாங்கி வந்து வீட்டில் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த இவரது பேரன் ரித்திஷ் அவர் அருகே வந்து தட்டில் வைத்திருந்த முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களைத் தாத்தாவிடமிருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் சின்னசாமி தான் குடித்துக் கொண்டிருந்த மதுவை பாதி வைத்துவிட்டு, சிறிதுநேரம் வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுவன் ரித்திஷ் தாத்தா குடித்தது குளிர்பானம் என நினைத்து டம்ளரிலிருந்த மீதி மதுவைக் குடித்த போது இருமல் ஏற்பட்டுள்ளது. பேரனின் இருமல் சத்தம் கேட்டு உள்ளேவந்து பார்த்தபோது மது குடிப்பதை அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் சிறுவன் உடனே மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து சின்னச்சாமி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது கடுமையாக சின்னசாமியை திட்டியுள்ளனர். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சின்ன சாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பிவைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தா, பேரன் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories