தமிழ்நாடு

“வேலை கிடைக்காமல் மயானத்தில் பணி செய்த பட்டதாரி.. அரசு வேலைக்கு பரிந்துரை” : உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளைஞருக்கு அரசு வேலைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வேலை கிடைக்காமல் மயானத்தில் பணி செய்த பட்டதாரி.. அரசு வேலைக்கு பரிந்துரை” : உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரின் தாத்தா - அப்பா என தலைமுறை தலைமுறையாக மானாமதுரை மயானத்தில் பிணம் எரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். கருத்தகாளை, பஞ்சவர்ணம் தம்பத்தியினருக்கு மகனான பிறந்த சங்கர் வீட்டில் அம்மா - அப்பா அண்ணன், தம்பி தங்கை என 6 பேர் உள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சங்கர் மட்டும் படித்து வந்துள்ளார். தனது இடைவிடாது கடின உழைப்பு மூலம், சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் பெற்றுள்ளார். முதல்தலைமுறை பட்டதாரியான சங்கர், குடும்ப வறுமைக் காரணமாக சிறுவயது முதலே பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் தனது தந்தை, தாயிக்கு உதவியாக சுடுகாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதனிடையே ஒவியம் மீது இருந்த ஆர்வத்தால் ஒவியம் கற்றுக்கொண்டு அருகில், உள்ள தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்திற்கு ஓவிய ஆசிரியராக பணிக்குச் சேர்ந்து வேலை செய்து வருகிறார். மேலும் அந்த வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாதால் மீண்டும் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் பணி செய்து வருகிறார் சங்கர்.

“வேலை கிடைக்காமல் மயானத்தில் பணி செய்த பட்டதாரி.. அரசு வேலைக்கு பரிந்துரை” : உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்!

இந்நிலையில் சங்கரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், தனக்கு அரசு உதவ முன்வர வேண்டும் என்றும் ஏதேனும் வேலை வழங்கினால் எங்கள் குடும்ப வாழ்க்கை மேம்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மாவட்ட ஆட்சியர் மதுசூதன் கவனத்திற்குச் செல்ல அவருக்கு அரசு வேலை கிடைக்க உதவ முன்வந்தார்.

அதன்படி, மானாமதுரை வட்டாச்சியர், தலைமை வருவாய் துறை அதிகாரிகள் ஓவிய ஆசிரியர் சங்கர் வீட்டிற்கு சென்று விசாரணை செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து சங்கருக்கு அரசு வேலைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories