தமிழ்நாடு

“பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்” : போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

வாணியம்பாடியில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

“பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்” : போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்னேரி குரும்பர் வட்டம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 26), கன்டெய்னர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதமாக வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த  10 ஆம் வகுப்பு படிக்கும் (15 வயது) மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார்.

இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனிடையே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விஜய் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories