தமிழ்நாடு

“எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” : 5 ரூபாய் டாக்டருக்கு சிலை திறந்த வட சென்னை மக்கள்!

வடசென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு அப்பகுதி மக்கள் சிலை வைத்து கவுரவப்படுத்தியுள்ளனர்.

“எங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” : 5 ரூபாய் டாக்டருக்கு சிலை திறந்த வட சென்னை மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வடசென்னையில் ஐந்து ரூபாய் டாக்டர் என புகழ் பெற்றவர் திருவேங்கடம். வியாசர்பாடி கணேசபுரத்தில் கிளினிக் வைத்து அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு ஆரம்ப கட்டத்தில் இரண்டு ரூபாயும் அதன் பின் 5 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை கட்டணமாக பெற்றிருந்தார். இதனால் சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கியதால் இவருக்கு ஐந்து டாக்டர் என்று அப்பகுதி மக்கள் பெயர் வைத்தனர்.

தீடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் திருவேங்கடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மறைவையடுத்து ஒன்றிய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இவரது கிளினிக்கில் நம்பிக்கை சமூக நல அறக்கட்டளை சார்பில் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் ஒரு மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலையை மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி திறந்து வைத்தார். திறப்புவிழாவில் ஆனை பன்னீர்செல்வம் மூத்த பத்திரிகையாளர்கள் ம .வி.ராஜதுரை, சமூக நல அறக்கட்டளை தூயவன், டாக்டர் திருவேங்கடத்தின் துணைவியார் சரஸ்வதி அவரது மகள் பிரீத்தி திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் செடிகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. பொதுநல அமைப்பினர் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories