தமிழ்நாடு

இறந்துவிடுவோமா என்ற அச்சம்.. கருவைக் கலைக்க மருந்து சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

கருவைக் கலைக்க மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து சாப்பிட்ட வடமாநில பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இறந்துவிடுவோமா என்ற அச்சம்.. கருவைக் கலைக்க மருந்து சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த கொரட்டூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப்உள்கா. ஒடிசாவைச் சேர்ந்த இவர் தனது மனைவி குமாரி கஞ்சக்காவுடன் தங்கிக் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து பிரசவத்தின் போது இறந்த தனது அண்ணியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் குமாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்தார். அப்போது அவரது உறவினர்கள் குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்து அவரிடம் கூறியுள்ளனர்.

இதனால் குமாரி மன ரீதியாக அச்சமடைந்துள்ளார். மேலும் தனது அண்ணியைப் போல் நாமும் பிரசவத்தின் போது இறந்துவிடுவோமாக என்றும் அச்சப்பட்டுள்ளார். இதனால் மருத்துவர் அறிவுரையை எதுவும் கேட்காமல் நாட்டு மருந்தைச் சாப்பிட்டு வந்துள்ளார்.

இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நிலைக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இருந்தபோதும் அவர் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வந்துள்ளார். மேலும் இது குறித்து கணவரிடம் எதுவும் கூறாமல் இருந்த நிலையில் அவருக்கு சில நாட்களாகச் சிறுநீரகம் வெளியேறாமல் இருந்துள்ளது.

இறந்துவிடுவோமா என்ற அச்சம்.. கருவைக் கலைக்க மருந்து சாப்பிட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

பிறகு இது குறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதித்தபோது கர்ப்பப்பை சீழ் பிடித்து மிகவும் மோசமடைந்திருப்பதை தெரியவந்தது.

பின்னர் குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இது குறித்து குமாரியின் சகோதரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவன் பிரதாப் உள்காவிடம் விசாரணை செய்தனர். இதில் கருவைக் கலைப்பதற்காகக் குமாரி நாட்டு மருந்து உட்கொண்ட சில நாட்களிலேயே சிறு இறந்து விட்டதும், ஆனால் இறந்த சிசு வெளியேறாமல் கர்பப்பையிலே தங்கி சீல் பிடித்ததே குமாரியின் இறப்புக்குக் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories