தமிழ்நாடு

“இனி தமிழ்நாட்டை பார்த்து கேரளா கற்றுக்கொள்ளும்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் !

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாட்டைப் பார்த்து கேரளா கற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“இனி தமிழ்நாட்டை பார்த்து கேரளா கற்றுக்கொள்ளும்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தி.நகரில் உலக இருதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நடத்தும் இளம் வயதிற்கான இருதய விழிப்புணர்வு மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சென்னை தி.மு.க மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் அரவிந்தன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, “கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அறை இல்லாத நிலை இருந்தது. ஆனால், காவேரி மருத்துவமனையில் தனக்கு உதவி என்று கேட்டால் மருத்துவமனையில் கரம் நீட்டி வரவேற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் வருமுன் காப்போம் திட்டத்தை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட அந்த திட்டம் இன்று மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் தொற்று 36 ஆயிரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்த தி.மு.க அரசு பதவி ஏற்கும்போது 30 ஆயிரத்திற்கு மேலாக இருந்தது. பின்ன பொறுப்பேற்ற தி.மு.க அரசின் சீரிய முயற்சியினால் இன்று ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

தி.மு.க எதிர்கட்சியாக இருந்த போது கேரளா முதல்வரை பார்த்து தமிழ்நாடு கொரோனா கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னோம். தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், கொரோனா கட்டுப்படுத்தியதைப் பார்த்து கேரளா கற்றுக் கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதை சபரிமலை சென்றிருந்த போது கேரள மக்கள் கூறினார்கள். கொரோனாவை வீழ்த்திய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையே சேரும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories