தமிழ்நாடு

"இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" : 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சீனிவாசன், கிருஷ்ணப்பிரியா என இரண்டு குழந்தைகள் இருந்தனர். முருகன், சேலம் மாவட்டம் குப்பனூர் பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் குப்பனூர் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைகளைத் தாக்கி, மரத்தில் தூக்கிட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் இதை வீடியோ எடுத்து, "இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க" எனப் பேசியுள்ளார். மேலும் இந்த வீடியோவை தனது உறவினர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு முருகனும் அதே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலிஸார் முருகனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories