தமிழ்நாடு

“இல்லையென்றால் உரையாடலை வெளியிடுவேன்” : பேஸ்புக்கில் காதல் வலை.. இளம் பெண்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

ஃபேஸ்புக்கில் காதல் வலை வீசி இளம் பெண்களிடம் இருந்து பணம் நகைப் பறித்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர்.

“இல்லையென்றால் உரையாடலை வெளியிடுவேன்” : பேஸ்புக்கில் காதல் வலை.. இளம் பெண்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நிஷாந்த் என்பவர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்தார்.

அவரின் பேச்சுக்களை நம்பி, நானும் பேசியதைத் தொடர்ந்து, அந்த சாட்டிங்கை வெளியிடுவதாக மிரட்டி தன்னிடம் இருந்து நகை பணம் பறித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து அந்த பெண்ணின் புகாரை விசானைக்கு எடுத்த போலிஸார், செல்போன் எண் மூலம் சோதனை நடத்தியதில், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் லோகேஷ் என்ற இளைஞர் சிக்கினார். பின்னர் அவரைக் கைது செய்து போலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், லோகேஷ் +2 முடித்துவிட்டு, பி.ஈ பட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த லோகேஷ் ஃபேஸ்புக்கில், நிஷாந்த், விமலேஷ், விமல் என்ற பல்வேறு போலி பெயர்களில், அழகான இளைஞர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பல போலி கணக்கை உருவாக்கியுள்ளார்.

“இல்லையென்றால் உரையாடலை வெளியிடுவேன்” : பேஸ்புக்கில் காதல் வலை.. இளம் பெண்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

அந்த கணக்குகள் மூலம் கல்லூரி மாணவியர், திருமணமாகாத பெண்களுடன் நட்புடன் பேசி, நாளடைவில் அவர்களின் வாட்ஸ் ஆப் எண்களைப் பெற்று காதல் வலை வீசியுள்ளார். லோகேஷின் பேச்சை நம்பி பலரும் காதலித்துள்ளனர். தினமும் சாட்டிங் மூலம் பேசி குடும்ப செலவு, மருத்துவச் செலவு எனப் பல்வேறு காரணங்களை கூறி, அந்த பெண்களிடம் நகைப் பணம் பெற்றுள்ளார்.

இவரின் பேச்சுக்களை நம்பாத பெண்களிடம் இருவரும் பேசிய உரையாடலை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி பணம் பறித்துள்ளார். மேலும் பல பெண்களிடன் அந்தரங்கமாக பேசிய உரையாடலை வைத்து பணம் பறித்துள்ளதாகவும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது கூரியர் மூலம் பணம் நகை பறித்துள்ளார். சுமார் 15 பெண்களிடம் இருந்து, 13 சவரனுக்கு மேலாக நகைகளையும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சென்னை, கன்னியாகுமாரி, கோயமுத்தூர், திண்டுக்கல், மதுரை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதியிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலரும் இவனால் பாதிக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த பெண்கள் யாருமே லோகேஷை ஒரு முறைக் கூட நேரில் பார்த்தில்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories