தமிழ்நாடு

“வழிபறி செய்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையனுக்கு நேர்ந்த கதி” : மதுரையில் பரபரப்பு - என்ன நடந்தது?

மதுரையில், வழிபறி செய்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது விபத்தில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார்.

“வழிபறி செய்துவிட்டு தப்பிச் சென்ற கொள்ளையனுக்கு நேர்ந்த கதி” : மதுரையில் பரபரப்பு - என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு மற்றும் அரி. இவர்கள் இருவரும் சனிக்கிழமையன்று நள்ளிரவு மதுரை செல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் வழிபறி செய்துள்ளனர்.

அப்போது, இவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது இருசக்கர வாகனத்தில் ஏறி இருவரும் தப்பித்துச் சென்றுள்ளனர். பிறகு பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க வேகமாக வாகனத்தை ஓட்டியபோது, சாலையிலிருந்த தடுப்புகள் மீது மோதியுள்ளனர்.

இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அரி பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த விஷ்ணு மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள அரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories