தமிழ்நாடு

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி.. பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை - நடந்தது என்ன?

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது முறையாக இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி.. பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இவரது மனைவி லீனா பாலும் சேர்ந்து தொழிலதிபர் சிவீந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரை ஏமாற்றி 200 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த மாதம் 24 ந்தேதி சென்னைக் கிழக்குக் கடற்கரையில் உள்ள லீனா பாலின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் 82.5 லட்ச ரூபாய் பணம், விலையுயர்ந்த கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத்தருவதாகக் கோரி ஏமாற்றிய வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறைத் தண்டனை பெற்று வருகிறார். சிறையிலிருந்து கொண்டே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில், இவருக்கு யார் யார் உதவினார்கள் என்பது குறித்தும் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.200 கோடி வரை மோசடி.. பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை - நடந்தது என்ன?

இந்நிலையில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அடிக்கடி அவருடன் பேசியுள்ளார். இது குறித்துக் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories