தமிழ்நாடு

ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை... வழக்கின் பின்னணி என்ன?

கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை, மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை... வழக்கின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த கண்ணகி - முருகேன் ஆணவக்கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் தம்பதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன் பி.இ பட்டதாரி.

இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 2003 மே 5ஆம் தேதி கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு காதல் விவகாரம் தெரியவந்தது.

இதையடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், கண்ணகியையும் அழைத்துவந்தனர். இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று வலுத்த கோரிக்கையை தொடர்ந்து, 2004ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

பின்னர், சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக நீதி கிடைத்திருந்தாலும், ஆணவக் கொலைக்கு எதிரான மிகமுக்கியமான தீர்ப்பு இது என சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories