தமிழ்நாடு

“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்!

சென்னை குன்றத்தூர் அமிராமியின் தம்பி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக் குறித்து அதிர்ச்சி காரணமும் வெளியாகியுள்ளது.

“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 2018ம் ஆண்டு தகாத உறவால் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த டிக்டாக் பிரபலம் அபிராமியின் சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில், அத்தகைய கொலை சம்பவத்தை செய்த அமிராமியின் தம்பி, தற்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக் குறித்து அதிர்ச்சி காரணமும் வெளியாகியுள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி. திருமணமாகி 7 வயதில் மகனும், 4 வயதிலும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். டிக்டாக்கில் தனது பொழுதுபோக்கை கழித்து வந்த அபிராமி தனது ஆண் நண்பர்களுடன் காதல் வீடியோ வெளியிட்டு பிரபலமானார்.

இந்நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பிரியாணி கடையில் பணியாற்றிய சுந்தரம் என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரத்துடன் சேர்ந்து வழவேண்டும் என்பதற்காக தனது வாழ இரண்டு குழந்தைகளுக்கும் கணவருக்கும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்தார அபிராபி.

இதில் கணவர் உயிர் தப்பித்த நிலையில், இரண்டு பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அபிராமி மற்றும் சுந்தரம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அபிராமி வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், 27 வயதாகும் அபிராமியின் சகோதரர் பிரசன்ன மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்!

தனியார் வங்கியில் பணியாற்றி வந்த சம்பவம் நடைபெற்ற வெள்ளி கிழமையன்று போனில் யாருடனோ சண்டைப் போட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரவு தூங்கச் சென்ற பிரசன்னா தனது அறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரதாதால் பெற்றோர் அறைக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பிரசன்னா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மாங்காடு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் நடத்திய முயற்கட்ட விசாரணையில், பிரசன்னா சில ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பெரியவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். மேலும் இதற்கான ஏற்பாடும் நடந்துள்ளது.

இந்நிலையில் பெண் வீட்டாரின் உறவினர்கள் குழந்தையைக் கொலை செய்த பெண்ணின் குடும்பத்திற்கு உங்கள் மகளை தள்ளிவிட வேண்டுமா என கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அந்தபெண்ணும் பிரசன்னாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா தூக்கிட்டு தற்கொளை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories