தமிழ்நாடு

ரூ.2200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்.. 41,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. அசத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

ரூ.2200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்.. 41,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. அசத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து “வர்த்தகம் மற்றும் வணிக வாரம்” நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” மாநாட்டை தொடங்கி வைத்தார். உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக மாநாடு துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை நடைபெறுகின்றன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை” மற்றும் “குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு” ஆகியவற்றையும் வெளியிட்டார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரப்பர் குலாய் உற்பத்தி திட்டம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொதிகலன் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கோடி ரூபாய் முதலீட்டில் 100 பேருக்கு வேலை வழங்கும் வகையில் விவசாய கரிம உரங்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னேரியில் தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா 239 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீட்டு ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்தாகியுள்ளன. 10 ஏற்றுமதி நிறுவனங்களுடன் ரூ 240 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருவள்ளூரில் ரூ. 50 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உதிரிபொருள் நிறுவனம் தொடங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இவ்விழாவில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சஞ்சய் சத்தா, தமிழ்நாடு அரசின் தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், இ.ஆ.ப., ஒன்றிய வர்த்தகத் துறையின் கூடுதல் இயக்குநர் சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories