தமிழ்நாடு

மது விருந்து;ஆபாச நடன நிகழ்ச்சி: கர்நாடக எல்லையில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் உட்பட 35 பேர் அதிரடி கைது!

தமிழ்நாடு கர்நாடக எல்லையில் தனியார் விடுதியில் ஆபாச நடன நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் உட்பட 35 பேரை போலிஸார் கைது செய்தனர்.

மது விருந்து;ஆபாச நடன நிகழ்ச்சி: கர்நாடக எல்லையில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் உட்பட 35 பேர் அதிரடி கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் தனியார் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நேற்று இரவு மது விருந்து, ஆபாச நடன நிகழ்ச்சி நடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து ஆனெக்கல் போலிஸார் தனியார் விடுதிக்குச் சென்று மது போதையில் நடனமாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வந்துள்ளனர் என்பதும், ரேவ் பார்ட்டி என்ற பெயரில் இந்த நள்ளிரவு ஆபாச நடன விருந்துகள் நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த மது விருந்தில் கலந்து கொண்ட 2 பெண்கள் உட்பட 35 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக எல்லையில் தனியார் விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories