தமிழ்நாடு

“கணவரை இழந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூ.13 லட்சம் மோசடி” : விவாகரத்து வழக்கில் அதிர்ச்சி சம்பவம்!

காவல்துறையில் வேலைவாங்கித் தருவதாகப் பெண்ணிடம் பணமோசடி செய்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

“கணவரை இழந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூ.13 லட்சம் மோசடி” : விவாகரத்து வழக்கில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த சூரப்பட்டைச் சேர்ந்தவர் லட்சுமிப்பிரியா. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்த்து வருகிறனர். இந்நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற உதவிடுமாறு தன்னுடன் கல்லூரியில் படித்த மதன் குமார் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது மதன் குமார், தனது தந்தை புழல் சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றிவந்தார்.

அவர் இறந்துவிட்டதால் நான் அங்கு தற்போது வேலை செய்து வருகிறேன் என கூறி போலி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். மேலும் தனக்குத் தெரிந்த வழக்கறிஞர் மூலம் விவாகரத்து வாங்கித் தர உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவாகரத்து வாங்கித்தறேன் என கூறி லட்சுமி பிரியாவிடம் ரூபாய் 13 லட்சம் வரை மதன் குமார் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி விவாகரத்திற்கான ஏற்பாடுகளை அவர் செய்யவில்லை. இதனால் ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமிப்பிரியா, கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது, லட்சுமிப்பிரியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மதன்குமார். இதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இவரின் புகார் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து பண மோசடி செய்த மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories