தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய பாஜக MLA மகன்: தலைகீழாக கவிழ்ந்த கார் - சேலம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி!

கோவையில் இருந்து சென்னைக்கு வந்துக்கொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் மகனின் கார் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய பாஜக MLA மகன்: தலைகீழாக கவிழ்ந்த கார் - சேலம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள பட்டர்ஃப்ளை மேம்பாலம் வழியே நேற்றிரவு 11.30 மணியளவில் வந்த மாருதி பலினோ கார் ஒன்று தடுப்புச் சுவரில் மோதி கட்டுப்பாட்டை இழந்ததால் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் கார் கடுமையாக சேதமடைந்தது. விபத்து குறித்து விசாரித்ததில் காரில் பயணித்தது கோவை தெற்குத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் என தெரியவந்தது.

விபத்தில் சிக்கிய பாஜக MLA மகன்: தலைகீழாக கவிழ்ந்த கார் - சேலம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி!

சம்பவம் நடந்ததும் தனது தாய் வானதி சீனிவாசனுக்கு ஆதர்ஷ் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே சேலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகளை அணுகி ஆதர்ஷை கவனிக்கச் செய்திருக்கிறார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதித்ததில் ஆதர்ஷுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, விபத்துக்குள்ள ஆதர்ஷின் கார் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories