தமிழ்நாடு

நீட் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. பெற்றோருக்கு ஆறுதல்!

சேலத்தில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நீட் காரணமாக உயிரிழந்த மாணவன் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. பெற்றோருக்கு ஆறுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் - சிவஜோதி தம்பதியரின் இரண்டாவது மகன் தனுஷ் என்ற மாணவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், இன்று நடைபெறும் நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வரை படித்து வந்த மாணவர் மாணவர் தனுஷ் , நீட் தேர்விற்கு பயந்த இன்று அதிகாலை வீட்டின் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்று அவரது சொந்த கிராமமான கூழையூர் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சர்கள், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவர் தனுஷின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

banner

Related Stories

Related Stories