தமிழ்நாடு

“மணமக்களை திகைக்க வைத்த பரிசு...” : மோடி அரசை விமர்சிக்கும் வகையில் மண் அடுப்பை பரிசளித்த செவிலியர்கள்!

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை விமர்சிக்கும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு வழங்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“மணமக்களை திகைக்க வைத்த பரிசு...” : மோடி அரசை விமர்சிக்கும் வகையில் மண் அடுப்பை பரிசளித்த செவிலியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பை விமர்சிக்கும் வகையில் சென்னையில் மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு வழங்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரசு மருத்துவமனை செவிலியர் திருமணத்தில் உடன் பணியாற்றும் செவிலியர்கள் மண் அடுப்பை பரிசாக வழங்கிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் அதுல்யா மற்றும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் இருவருக்கும் ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மணமக்களை வாழ்த்த வந்த நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றும் செவிலியர்கள் மணமக்களுக்கு திருமணப் பரிசாக மண் அடுப்பை வழங்கினர்.

வரலாறு காணாத அளவிற்கு விலை ஏறும் சமையல் எரிவாயு விலையை சுட்டிக்காட்டும் விதமாக மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசாக வழங்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories