தமிழ்நாடு

வீச்சரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் : ராமநாதபுரத்தில் பரபரப்பு!

பெட்ரோல் பங்க்கில் ஆயுதங்களைக் காட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீச்சரிவாளை காட்டி பெட்ரோல் பங்கில் ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல் : ராமநாதபுரத்தில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வண்ணாந்தரவை மின்வாரிய நிலையம் அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கிற்கு இரவு நேரத்தில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர்.

இவர்கள் திடீரென பங்கிலிருந்த ஊழியர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அவர்களிடமிருந்த ரூபாய் 1,70 லட்சத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் மோர்குளம் என்ற கிராமத்தில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அங்கு சென்ற போலிஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்தது ஆய்வு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் யார் இந்த முகமூடி கொள்ளையர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories