தமிழ்நாடு

“கெட்டுப் போன கிரில் சிக்கன் கொடுத்து ஏமாத்துறியா?.. ஆத்திரத்தில் கடை உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்!

சென்னையில் கிரில் சிக்கன் நன்றாக இல்லை என கூறி ஓட்டல் உரிமையாளர் மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கெட்டுப் போன கிரில் சிக்கன் கொடுத்து ஏமாத்துறியா?.. ஆத்திரத்தில் கடை உரிமையாளர்  மீது கொடூர தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, தி.நகரைச் சேர்ந்த அஸ்மத் அலி என்பவர், தி.நகர், ராமேஸ்வரம் சாலை, நமஸ்கிருஸ்தம் பிளாட் என்ற இடத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு கடந்த 8ம் தேதி ஜெகன் என்பவர் கிரில் சிக்கன் வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், அவர் ஒருமணி நேரம் கழித்து மீண்டும் கடைக்கு வந்து, கெட்டுப்போன சிக்கன் கொடுத்ததாகக் கூறி, கடையிலிருந்து உரிமையாளரின் மகன் முகமது அர்ஷத் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு கடைக்கு வந்த ஜெகனின் நண்பர்கள் சிலர் அர்ஷத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற கடையில் வேலை பார்த்தவர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

பின்னர் ரத்தக் காயமடைந்த முகமது அர்ஷத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு நடந்த சம்பவம் குறித்து R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்த ஜெகனை கைது செய்த போலிஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories