தமிழ்நாடு

“துப்பாக்கி எடுத்து சுட்டுருவேன்” : விசாரணைக்கு சென்ற போலிஸாரை மிரட்டிய முதியவர் : என்ன நடந்தது?

சென்னையில் போலிஸாரை துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என முதியவர் ஒருவர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“துப்பாக்கி எடுத்து சுட்டுருவேன்” : விசாரணைக்கு சென்ற போலிஸாரை மிரட்டிய முதியவர் : என்ன நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை, கோயம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது தங்கை ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இதனால் ராஜலட்சுமியை, இளங்கோவன் வீட்டிலிருந்து துரத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ராஜலட்சுமி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இவரின் இந்த புகார் அடிப்படையில், உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலிஸார் இளங்கோவன் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இளங்கோவன் போலிஸார் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அவர், “காவல்துறையின் உயர் அதிகாரிகள் எனக்குத் தெரியும். என் மீது நடவடிக்கை எடுத்தால் உனது வேலை போய்விடும். எனவே நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள்.

இல்லை என்றால் என்னிடம் துப்பாக்கி உள்ளது. உங்களை சுட்டுக்கொலை செய்துவிடுவேன். விசாரணைக்கு எல்லாம் என்னால் வரமுடியாது என் வீட்டிலிருந்து நீங்க எல்லோரும் வெளியேறுங்கள்” என பேசியுள்ளார்.

போலிஸாரை மிரட்டும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளங்கோவைக் கைது செய்ய போலிஸார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories