தமிழ்நாடு

காதலித்து டாட்டா காட்டிய கிரேன் ஆபரேட்டர்: நியாயம் கேட்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய எத்தனித்தவரை கதிகலங்க வைத்த இளம் பெண்ணால் பரபரப்பு நிலவியது.

காதலித்து டாட்டா காட்டிய கிரேன் ஆபரேட்டர்: நியாயம் கேட்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் குடவாசல் நல்லிச்சேரியை சேர்ந்தவர் செல்வி. இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். செல்வியும் திருவாரூர் செம்மங்குடியைச் சேர்ந்த செந்தில் முருகனும் பல நாட்களாக காதலித்து வந்திருக்கிறார்கள்.

கிரேன் ஆப்பரேட்டரான செந்தில் முருகன் பணி நிமித்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றிருக்கிறார். தற்போது ஊர் திரும்பிய அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் அமோகமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

காதலித்து டாட்டா காட்டிய கிரேன் ஆபரேட்டர்: நியாயம் கேட்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
DELL

இந்நிலையில் மணக்கால் அய்யம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் செந்தில் முருகனுக்கும் அவரது வீட்டில் பார்த்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை அறிந்திருக்கிறார்.

இதனையடுத்து செந்திலின் திருமணத்தை நிறுத்த மண்டபத்துக்கு நேரடியாக சென்ற செல்வியை போலிஸார் மற்றும் உறவினர்கள் என பலரும் இடைமறித்திருக்கிறார்கள்.

இதனால் செல்விக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு முற்றியதால் செந்திலால் கைவிடப்பட்ட அந்தப் பெண்ணை போலிஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

banner

Related Stories

Related Stories