தமிழ்நாடு

“விநாயகர் சதுர்த்தி தடை உத்தரவில் தலையிட முடியாது” : மனுதாரருக்கு ‘குட்டு’ வைத்த உயர்நீதிமன்றம் !

பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

“விநாயகர் சதுர்த்தி தடை உத்தரவில் தலையிட முடியாது” : மனுதாரருக்கு ‘குட்டு’ வைத்த உயர்நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்சம் ஐந்து பேராவது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதர உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுபிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

banner

Related Stories

Related Stories