தமிழ்நாடு

முதல்வரின் விளம்பரம் இல்லாமல் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்: ஆசிரியர்கள் நெகிழ்ச்சி - குவியும் பாராட்டு!

பாராட்டுச் சான்றிதழில் முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் விளம்பரம் இல்லாமல் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்: ஆசிரியர்கள் நெகிழ்ச்சி - குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டாக்டர் எஸ்.ராதகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கல்வியில் சிறந்த தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதகிருஷ்ணன் விருது’ வழங்கி ஆசிரியர்களை கவுரவித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

அந்தவகையில் 2020 - 2021ம் கல்வியாண்டியில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக செயலாற்றிய 379 ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கியது தமிழ்நாடு அரசு.

அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தனது பாராட்டினை தெரிவித்திருந்தார்.

முதல்வரின் விளம்பரம் இல்லாமல் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்: ஆசிரியர்கள் நெகிழ்ச்சி - குவியும் பாராட்டு!

இது நிகழ்ச்சி ஏதோ வழக்கம் நடக்கும் சடங்கு நிகழ்ச்சிப் போல் இல்லாமல், எங்களுக்கு புதுஉத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் இருப்பதாக விருது வெற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதில் 2007 ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்றைய நடப்பாண்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கிய விருதில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சர் படம் இல்லாமல், அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப் பின்னர் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். அந்தவகையில் தற்போது சுயவிளம்பரம் இன்றி, பாராட்டு சான்றிதழில் அரசின் முத்திரையும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது ஆசிரியர்களும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்வரின் விளம்பரம் இல்லாமல் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்: ஆசிரியர்கள் நெகிழ்ச்சி - குவியும் பாராட்டு!

முன்னதாக, “தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் இருந்தது. இந்த படத்தை நீக்கினால் 13 கோடி வரை செலவாகும். இந்த பணத்தை கொரோனா தொற்றுக்கு எதிரகாப் பயன்படுத்தலாம். யார் படம் இருந்தால் என்ன அப்படியே பையை கொடுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பெரும் பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories