தமிழ்நாடு

“இதுபோன்ற அரசியலை நான் பார்த்ததில்லை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்துறாரு” : விஜய் சேதுபதி பாராட்டு!

பள்ளி வழங்கும் பையில் முந்தைய ஆட்சியரின் படத்தினை நீக்கி புதிதாக போட்டால் ரூ.13 கோடி கூடுதல் செலவாகும். அந்த பயன்படுத்தலாம் என்று முதல்வர் கூறுவது சிறப்பானது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற அரசியலை நான் பார்த்ததில்லை; முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அசத்துறாரு” : விஜய் சேதுபதி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் விஜய் சேதுபதி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தி.மு.க ஆட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் எனவும் பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி அளித்த பேட்டி வருமாறு:

“சட்டசபையில் நடைபெறுவதை எல்லாம் நான் வீடியோவில் பார்ப்பேன். யூ டியூபில் பார்ப்பேன். நிச்சயமாக அது நல்லாயிருக்கு. எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நிறைய பேருக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நிறைய கமெண்ட் எல்லாம் பார்ப்பேன்.

முதல்வர் அவர்கள் பேசுவது எல்லாமே மிகவும் நல்லாயிருக்கு. ஆரோக்கியமா இருக்கு. இந்த முறை எல்லோரையும் நான் கேட்டிருந்தேன். ஆதரவு இருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 3 கோடி வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். இதுபோன்ற அரசியலை நான் ரொம்ப நாளாக பார்த்ததில்லை.

அம்மா உணவகத்தை அடித்து உடைத்தபோது அதை திரும்ப சரி செய்ய வேண்டும் என்று அவர்களை பிடித்து உள்ளே போட்டிருப்பது மிகவும் அற்புதமான விஷயம். அதை ஏன் உடைக்க வேண்டும் என்று ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா? அது அங்கு வந்தவுடனே மக்களுடைய இமேஜை கெடுத்து விடுகிறது.

“இதுபோன்ற அரசியலை நான் பார்த்ததில்லை; முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அசத்துறாரு” : விஜய் சேதுபதி பாராட்டு!

அதில், உடனே தலையிட்டு தண்டனை வாங்கிக் கொடுத்து சரி செய்தது என்பது மிகவும் அற்புதமான விஷயம். மிகவும் பிரமாதம். பள்ளி மாணவர்களுக்கு பை வழங்குவதில் முந்தைய ஆட்சியாளர்களின் படத்தினை நீக்கி புதிதாக போட்டால் ரூ.13 கோடி கூடுதல் செலவாகும். அந்த ரூ.13 கோடியை மாணவர்களுக்கு வேறுவகையில் பயன்படுத்துங்க என்று கூறுவது சிறப்பானது.

அப்படி சொல்வது என்பது, முதல்வருக்கு உள்ள பக்குவம். அவர் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிதாக பாராட்டிக் கொள்வது இல்லை. அதெல்லாம் அவருக்குண்டான பக்குவம். அந்தப் பக்குவம் இல்லாமல் எப்படி ஒரு முதல்வர் இருக்க முடியும். அது மிகச்சிறந்த பண்பு. அதைப் பாராட்டுகிறேன்.

மிகவும் நல்லாயிருக்கிறது. சட்டசபையில் தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்கக்கூடாது. நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை எடுத்துக் கூறி முதல்வர் கண்டித்திருந்தார். பண்பாக அதை கண்டித்திருந்தார். அது பார்க்க நல்லாயிருக்கிறது. மிகவும் நல்லாயிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories