தமிழ்நாடு

”பக்கத்து வீட்டு பையனிடம் பேசுவது போல ஊக்கமளித்தார்” - முதல்வரை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சி!

பாராலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வென்றதை அடுத்து மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

”பக்கத்து வீட்டு பையனிடம் பேசுவது போல ஊக்கமளித்தார்” - முதல்வரை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வேலை வழங்குவதாக கூறினார். தங்கம் வெல்லும் குறிக்கோளுடன்தான் சென்றேன். ஆனால் மழையால் களம் ஈரமாக இருந்ததால் சரியாக தாண்ட முடியவில்லை. நிச்சயம் அடுத்த முறை தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்.

போட்டி தொடங்குவதற்கு முன் தொலைபேசி வழியாக பக்கத்து வீட்டு பையனிடம் பேசுவது போல பேசி நன்றாக ஊக்கப்படுத்தினார். சாதாரண விளையாட்டுகளுக்கு நல்ல முக்கியத்துவம் தருவதுபோல, பாரா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர கேட்டுக் கொண்டுள்ளேன்.

அதன் மூலம் பாரா விளையாட்டு போட்டிகளிலும் நிறைய தடகள வீரர்கள் உருவாவார்கள். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்" என்றார்.

இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.

banner

Related Stories

Related Stories