தமிழ்நாடு

சென்னையில் கடுமையான மேகமூட்டத்திற்கு காரணம் என்ன? - செப்., 6ஆம் தேதி வரை மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மிகவும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

சென்னையில் கடுமையான மேகமூட்டத்திற்கு காரணம் என்ன? - செப்., 6ஆம் தேதி வரை மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மிகவும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

சென்னையில் நிலவும் மேகமூட்டமான வானிலைக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 3ஆம் தேதி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

செப்டம்பர் 4ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் செப்டம்பர் 6 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories