இந்தியா

டெல்லியில் பேய்மழை... 10 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவால் வெள்ளக்காடான தலைநகரம் - வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருவதால் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

டெல்லியில் பேய்மழை... 10 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவால் வெள்ளக்காடான தலைநகரம் - வானிலை மையம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஒரே நாளில் டெல்லியில் 11.21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ஆசாத் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.ஓ, ஐ.பி. மேம்பாலம் அருகே உள்ள ரிங் ரோடு, தௌலகுவான், ரோத்தக் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ஆக.,31, காலை 8:30 முதல் செப்.,1 வரை, டெல்லியின் சப்தர்ஜங்கில் 112.1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. லோடி சாலையில் 120.2 மிமீ, ரிட்ஜ் 81.6 மிமீ மழை பதிவாகியது.

டெல்லியில் பேய்மழை... 10 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவால் வெள்ளக்காடான தலைநகரம் - வானிலை மையம் எச்சரிக்கை!

இதற்கு முன், கடந்த 2002, செப்., 13ல் டெல்லியில் 126.8 மி.மீ மழை பதிவானது. அதற்கு முன், 1963, செப்., 16ல் 172.6 மி.மீ மழை பதிவானது. குறைந்தபட்சம் 19 ஆண்டுகளில் ஒரே நாளில் செப்டம்பர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை பதிவு இதுவாகும்.

அடுத்த சில தினங்களுக்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்யும். பகல் நேரத்தில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories