தமிழ்நாடு

“கல்லூரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதி” : அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

கல்லூரிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதி. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

“கல்லூரியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதி” : அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிக்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கல்லூரிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளதுஇன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகளுக்கு வருவது குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 7ஆம் பருவ மாணவர்களுக்கான ஆய்வு கூடத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தோம்.

50பேர் இருக்கும் வகுப்பில் 25 பேர் இருக்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நேரடி வகுப்பு மட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறுகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிகுறி உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்படும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories