தமிழ்நாடு

“விலை உயர்வைப் பயன்படுத்தி தரமற்ற பெட்ரோல், டீசலை விற்ற வடமாநில மோசடி கும்பல்” : சிக்கியது எப்படி?

அரியலூர் மாவட்டத்தில் தரம் குறைந்த பெட்ரோல், டீசலை விற்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர்.

“விலை உயர்வைப் பயன்படுத்தி தரமற்ற பெட்ரோல், டீசலை விற்ற வடமாநில மோசடி கும்பல்” : சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, மக்களுக்கு இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை100 ரூபாய்க்குக் குறைவாக விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே வயல்வெளியில் டேங்கர் லாரி மூலம் சந்தை மதிப்பைக் காட்டிலும் 15 ரூபாய் அளவிற்கு குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டிசல் விற்பனை செய்ததால் கூட்டம் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில், இதுதொடர்பாக , குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினருக்குப் புகார் வந்துள்ளது. இதையடுத்து அங்குச் சென்ற போலிஸார், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி 23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் மற்றும் டிசலை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது கப்பல்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தரம் குறைந்த டீசல் என்பது தெரியவந்தது.

“விலை உயர்வைப் பயன்படுத்தி தரமற்ற பெட்ரோல், டீசலை விற்ற வடமாநில மோசடி கும்பல்” : சிக்கியது எப்படி?

பின்னர், போலிஸார் இதை விற்பனை செய்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த டீசல் மும்மையிலிருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து டேங்கர் லாரி ஓட்டுனர் உட்பட இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர். இவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories