தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ? - அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

செப்.1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ? - அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் சூழ்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பள்ளிகள் திறந்தால் தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்குமா என்பது குறித்து ஆலோசணை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு எப்படி பாதுகாப்பாக வகுப்புகள் நடத்துவது என்று ஆலோசணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாகக் தகவல் வெளிவந்துள்ளது.

எனவே கொரோனா தொற்று அண்டை மாநிலத்தில் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories