தமிழ்நாடு

“ராகவன் மட்டுமல்ல புகாரை வெளிகொண்டு வந்த மதனின் லட்சணமும் இதுதான்” : பாஜக-வை பார்த்து சிரிக்கும் மக்கள்!

அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக மதன் ரவிச்சந்திரன் மீது புகார் உள்ளது.

“ராகவன் மட்டுமல்ல புகாரை வெளிகொண்டு வந்த மதனின் லட்சணமும் இதுதான்” : பாஜக-வை பார்த்து சிரிக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதுமே பா.ஜ.கவினர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வண்ணம் உள்ளது. அந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் பாலியல் புகார்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் மீது ஆபாச வீடியோ தொடர்பான புகார் ஒன்று பூதாகரமாகியுள்ளது.

சமீபத்தில் பா.ஜ.கவில் உள்ள பெண்கள் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது பாலியல் புகாரைத் தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதுவும் சொந்த கட்சிக்காரர் மூலமாகவே சிக்கியுள்ளார்.

பா.ஜ.கவைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், ‘மதன் டைரீஸ்’ என்ற சேனலில் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் சமீபத்தில் முன்னாள் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தவர். ஆனால் இவருக்கு பெரிதாக எந்தப் பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் மதன் அதிருப்தியில் இந்த செயலைச் செயதாகவும் கூறப்படுகிறது.

“ராகவன் மட்டுமல்ல புகாரை வெளிகொண்டு வந்த மதனின் லட்சணமும் இதுதான்” : பாஜக-வை பார்த்து சிரிக்கும் மக்கள்!

தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களை வெளியிடுவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல். அப்படி களம் இறக்கப்பட்டவர் வரிசையில் மதன் ரவிச்சந்திரனும் ஒருவர்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. பல சேனலில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி துரத்தியடிக்கப்பட்ட மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனலைத் தொடங்கி அதன் மூலம் பா.ஜ.கவை எதிர்க்கும் தலைவர் பற்றி சர்ச்சைக் கருத்தை பேசி வந்துள்ளார். அதில், அவர் வீடியோ வெளியிடுவதன் நோக்கமே தமிழ்நாட்டில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைப் பற்றி பொய் தகவலை தருவதற்காகதான் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம், அவதூறு கருத்துக்களை பதிவிட்டுவந்த மதன் ரவிச்சந்திரன் மீது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரிக்கப்பட்டலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீது உள்ள அழுக்கை பார்த்துவிட்டு அடுத்தவர்களை குறை கூற வேண்டும் என்ற வாக்கியம் உள்ளது. அதனைப் பற்றி அறியாத மதன், தன் மீது உள்ள அழுக்கை மறைத்து நல்ல பிம்பத்தை கட்டிக்கொள்ள, சொந்தக் கட்சியின் மாநிலச் செயலாளருக்கு வெட்டு வைத்துள்ளார். தொடர்ச்சியாக பா.ஜ.க கும்பலின் அனைத்து மோசடி அராஜக அரசியலை அடையாளம் கண்டுக்கொண்ட மக்கள், கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரும் தரத்தில் ஒரேமாதிரியாக இருப்பதாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories