தமிழ்நாடு

‘அசைவத்தில் ஆரோக்கியம்” : Iconic of Non-Vegetarian Mess விருது பெற்ற மன்னா மெஸ்!

மன்னா மெஸ் Times of Indiaவின் ICONIC OF NON VEGETARIAN MESS விருது பெற்றுள்ளது.

‘அசைவத்தில் ஆரோக்கியம்” :  Iconic of Non-Vegetarian Mess விருது பெற்ற மன்னா மெஸ்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அச்சிறுபாக்கத்தில் ஜெயராஜ் என்பவர் நடத்தி வரும் மன்னா மெஸ்ஸூக்கு Times Of India நிறுவனம் Iconic of Non-Vegetarian Mess என்ற விருதை வழங்கியுள்ளது.

அச்சிறுபாக்கம் லூப் சாலையில், காவல் நிலையத்துக்கு அருகில் உள்ளது மன்னா மெஸ். ‘அசைவத்தில் ஆரோக்கியம்’ எனும் நோக்கத்தோடு செயல்படும் இந்த உணவகம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பேராசிரியராகப் பணியாற்றிய ஜெயராஜ் தனது வேலையை விட்டுவிட்டு, 24 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலான இந்த உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார். கேட்டரிங் படித்த அவரது சகோதரர் ஜெயக்குமார் சமையலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்.

தினசரி மதியம் ஒருவேளைச் சாப்பாடு மட்டுமே இந்த உணவகத்தில் கிடைக்கும். காலை 11.30க்கு தொடங்கி சுமார் 3 மணி வரையே இந்த உணவகம் செயல்படுகிறது.

அசைவ உணவில் ஆரோக்கியம் பேணுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் மன்னா மெஸ் ஜெயராஜ், தங்கள் உணவுக்கொள்கையை சுவரிலேயே பேனராக ஒட்டியிருக்கிறார்.

பிராய்லர் கோழி பயன்படுத்துவதில்லை; நாட்டுக்கோழி மட்டுமே பயன்படுத்தப்படும்; மைதா, நிறமிகள், சுவையூட்டி ரசாயனங்கள் சேர்ப்பதில்லை என்பன வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

உணவுப் பிரியர்களுக்கு சுவையான ஆரோக்கியமான அசைவ உணவைப் பரிமாறும் மன்னா மெஸ்ஸுக்கு, Times of India ஊடக நிறுவனம் Iconic of Non-Vegetarian Mess எனும் விருதை வழங்கி அங்கீகாரம் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories