தமிழ்நாடு

“சென்னையில் கலைஞருக்கு ரூ. 39 கோடி செலவில் நினைவிடம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி செலவில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“சென்னையில் கலைஞருக்கு ரூ. 39 கோடி செலவில் நினைவிடம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் அரும்பணிகளைப் போற்றும் விதமாக கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண் 10-ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர். 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கலைஞர், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

banner

Related Stories

Related Stories