தமிழ்நாடு

தாயை தாக்கிய மகன்.. “நன்றி உள்ள விலங்கு” என்ற பழமொழிக்கு உதாரணமாய் உரிமையாளரைக் காப்பாற்றிய நாய் !

நாமக்கல்லில் பெற்ற தாயை நடுரோட்டில் தாக்கிய மகனை போலிஸார் கைது செய்தனர்.

தாயை தாக்கிய மகன்.. “நன்றி உள்ள விலங்கு” என்ற பழமொழிக்கு உதாரணமாய் உரிமையாளரைக் காப்பாற்றிய நாய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், பொன்னேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள். மூதாட்டியான இவர் கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 7 லட்சம் வரை பணம் சேர்த்துவைத்துள்ளார். இவரது கணவர் இறந்ததை அடுத்து அவருக்குச் சொந்தமான நிலத்தையும் மகன் சண்முகத்திற்கு எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில், மூதாட்டி நல்லம்மாள் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கேட்டு மகன் சண்முகத் தொடர்ந்து தனது தாயைக் கொடுமைப் படுத்தி வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று மீண்டும் தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு மூதாட்டி தரமறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் வயதான தாய் என்றும் கூட பார்க்காமல் நடுரோட்டில் அவரை அடித்து கொடுமைப்படுத்தினார். அப்போது, மூதாட்டி நல்லம்மாள் வீட்டில் வளர்த்துவந்த நாய் அவரை காப்பாற்ற முயன்றது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, மூதாட்டியான தாயைத் தாக்கிய சண்முகத்தைக் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சண்முகத்தின் மனைவியை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories