தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் நிலக்கரி முறைகேடு: தங்கமணி அறிக்கை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!

வடசென்னை நிலக்கரி முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குழு அமைத்து அறிக்கை வெளியிடாதது ஏன்? என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க ஆட்சியில் நிலக்கரி முறைகேடு: தங்கமணி அறிக்கை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு மின் தயாரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இதுகுறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது.

அனல் மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்ந முறைகேடு குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து, முறைகேடு பிரச்சனையை தீவிரமாக விசாரிக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவித்தினார்.

அ.தி.மு.க ஆட்சியில் நிலக்கரி முறைகேடு: தங்கமணி அறிக்கை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “நிலக்கரி முறைகேடு இதுமுதல் கட்ட ஆய்வுதான் நடைபெறுகிறது. இறுதிகட்ட ஆய்வுக்கு பிறகே முழுமையாக தகவல் வெளியிடப்படும்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி குறைந்துள்ளதாக குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கள் ஆட்சியில் அமைத்த குழு என கூறியுள்ளார். அவர் அமைத்த குழு அறிக்கையை ஏன் வெளியிடவில்லை. இதில், எந்த தவறாக இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் என்னை சேர்க்க சதி என எடப்பாடி கூறியது குறித்து கேள்விக்கு தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி, விசாரணை நடைபெறுகிறது. விசாரணையை கண்டு ஏன் பயப்பட வேண்டும். மடியில் கனமுள்ளது; எனவே வழியில் பயப்படுகிறார்கள். சட்டத்துக்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories