தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியால் எப்போதும் சென்னைக்கு மிகப்பெரிய வளர்ச்சியே” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட்டு வருகின்றது.

“தி.மு.க ஆட்சியால் எப்போதும் சென்னைக்கு மிகப்பெரிய வளர்ச்சியே” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. வழக்கம் போல் உள்ள எண்ணிக்கையில்தான் உள்ளது, குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தாலும் அறிகுறிகளற்ற முறையில்தான் உள்ளது. அதனால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கவிதாராமு வடக்கு மாவட்ட பொருப்பாளர் செல்ல பான்டியன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்:-

தமிழக அரசுக்கு இதுவரை 2 கோடியே 69 லட்சத்து 91 ஆயிரத்து நூறு தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் 2 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரத்து 224 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது, தனியார் மருத்துவமனைகளுக்கு 21 லட்சத்து 62 ஆயிரத்து 960 தடுப்பூசி சென்ற நிலையில் 19 லட்சத்து 36 ஆயிரத்து 773 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டுமானப் பணிகள் தரமானதாக உள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது, கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரிகளுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதா அல்லது விதிமீறி வழங்கப்பட்டுள்ளதா சொந்த கட்டிடத்தில் அல்லது வாடகை கட்டிடத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி கேற்ப மருத்துவமனை கட்டிடங்கள் சீரமைப்பதற்கான அறிவிப்புகள் மானிய கோரிக்கையில் வெளியாகும், எலி பேஸ்ட் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை. வழக்கம் போல் உள்ள எண்ணிக்கையில் தான் உள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு வந்தாலும் அறிகுறிகளற்ற முறையில்தான் உள்ளது. அதனால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசிகள் தற்போது முறையாக வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த மாதமும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவரிடமிருந்து தடுப்பூசிகளை பெற்று முழுமையாக பொதுமக்களுக்கு தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக சுகாதாரத் துறை செயல்பட்டு வருகின்றது.

தற்போதைய அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தேர்வு காலகட்டம் என்பதால் நீட் பயிற்சியை எங்கும் நிறுத்தவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு முறையான ஏற்பாடுகளை தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவையும் அமைத்து அறிக்கையினை பெற்றுள்ளனர். அந்த அறிக்கைக்கு ஏற்ப சட்டவல்லுநர்களை கலந்து ஆலோசித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதையேதான் திமுக தேர்தல் அறிக்கையிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருந்ததோ அப்போதெல்லாம் சென்னைக்கு மிக பெரிய வளர்ச்சி கிடைத்துள்ளது. தற்போது 382வது ஆண்டு கொண்டாட்டத்தில் திமுக ஆட்சியில் உள்ளது இன்னும் பல சிறப்பு அம்சங்களையும் திட்டங்களையும் சென்னை மாநகராட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சென்னை பொலிவு பெறும். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கல்வித்துறையில் மாணவர்களின் தேர்ச்சி உள்ளிட்டவற்றை பார்க்கும்போது சதவீதம் குறைவாகவே உள்ளது. அந்த வகையில்தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories