தமிழ்நாடு

தாலிபான் விவகாரம் : தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த ஆப்கன் இராணுவ வீரர்கள் - நாடு திரும்புவதில் சிக்கல்!

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள், தங்கள் நாடுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான் விவகாரம் : தமிழ்நாட்டில் பயிற்சி முடித்த ஆப்கன் இராணுவ வீரர்கள் - நாடு திரும்புவதில் சிக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில், 19 நாடுகளை சேர்ந்த 479 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி தற்போது நிறைவுபெறும் சூழ்நிலையில் உள்ளது.

அவ்வாறு பயிற்சி முடிந்த பிறகு 19 நாடுகளைச் சேர்ந்த 479 அதிகாரிகளும் தங்கள் நாடுகளுக்கு செல்வது வழக்கம், தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மூன்று ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களில் பயிற்சி நிறைவு பெறவுள்ளது.

தற்போது ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் , இந்திய தூதரக ஊழியர்கள் உட்பட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் , இந்நிலையில் இங்கு பயிற்சி பெறும் ஆப்கன் ராணுவ வீரர்கள் பயிற்சி முடிந்து நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கன் வீரர்கள் தங்கள் நாடு திரும்புவது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் முடிவு செய்வார்கள் என வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories