தமிழ்நாடு

"இதுதான் தமிழ்நாடு” : 300 ஆண்டுகளாக மொகரம் கொண்டாடும் இந்துக்கள் - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான கிராமம்!

தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கு மேலாக மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி வருவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

"இதுதான் தமிழ்நாடு” : 300 ஆண்டுகளாக மொகரம் கொண்டாடும் இந்துக்கள் - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான கிராமம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் மொகரம் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்களும் மொகரம் பண்டிகை கொண்டாடி வருவது, சமத்துவத்தையும், மத நல்லிணக்கத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், காசவளநாடு புதூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள் மொகரம் பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பு ஊரின் பொது இடத்தில் கை உருவம் (அல்லா உருவம்) அமைத்து பந்தல் கட்டி விழா எடுத்து வருகிறார்கள்.

மேலும், தினமும் அதற்குப் பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வருகிறார்கள். இதையடுத்து மொகரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலை தீமிதி விழாவும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

"இதுதான் தமிழ்நாடு” : 300 ஆண்டுகளாக மொகரம் கொண்டாடும் இந்துக்கள் - மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான கிராமம்!

இதன்படியே நேற்று இரவு இந்து மக்கள் ஜோடித்த அல்லா சாமியை வீதியுலா எடுத்துச் சென்றனர். அப்போது மக்களும் மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து வழிபட்டனர். பின்னர் மீண்டும் செங்கரைச் சாவடிக்கு வந்து தீமிதி திருவிழா நடத்தினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து வழிபடுகின்றனர்" எனத் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories