தமிழ்நாடு

ஒய்ட்போர்டு மாரிதாஸுக்கு ‘பொளேர்’ பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!

“ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள்தான், இல்லாததை இருப்பதாக White boardல் அப்டேட் செய்து கொண்டிருப்பார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி.

ஒய்ட்போர்டு மாரிதாஸுக்கு ‘பொளேர்’ பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்ட பிறகு அ.தி.மு.க ஆட்சியின் முறைகேடு குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி மாயமாகி உள்ளது. அனல் மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் காணவில்லை.

அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது மக்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த ‘ஒயிட்போர்டு’ மாரிதாஸ் அ.தி.மு.க-வை காப்பாற்றும் நோக்கில் தி.மு.க மீது அவதூறு சுமத்தியுள்ளார்.

“தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு மின்வாரியத்திலிருந்து 2 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை. தகவல் கசிந்ததும், தி.மு.க அமைச்சர் நிலக்கரி காணவில்லை என்று இன்று பேட்டி கொடுக்கிறார். அது சுமார் 20 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி, தினமும் அப்டேட் செய்ய வேண்டிய தகவல் திடீர் என எப்படி மாயம்?” என மாரிதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “அன்புத் தம்பி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது அ.தி.மு.க ஆட்சியில். இது மார்ச் 2021 வரையிலான கணக்கு. அறமும், ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்கக்கூடிய அடிப்படையான அறிவுமில்லாதவர்கள் தான், இல்லாததை இருப்பதாக White boardல் அப்டேட் செய்து கொண்டிருப்பார்கள்.” என பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories