தமிழ்நாடு

வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?

பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பா.ம.க உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலுரைத்தார்.

வறுமையின் அடையாளமா அரசுப்பள்ளி? பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம் - பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். அப்போது, “தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை ஆறு மாதத்திற்கு மட்டுமே பொருந்தும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படிக்காக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிது ஒதுக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் துறைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்குவதாக நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். அரசுப் பள்ளிகள் நவீன பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அரசு பள்ளியில் வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories