தமிழ்நாடு

“தமிழ்நாட்டைச் சீர்படுத்துவதற்கான நல்ல தொடக்கம் இது” : தி.முக அரசுக்கு ‘The Hindu' நாளேடு புகழாரம்!

“தமிழ்நாட்டு நிதி நிலை மீது, வெள்ளை அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்ததன் மூலம் தி.மு.கழக அரசு, இழக்கப்பட்ட நிதிக் கட்டுப்பாட்டைச் சீர்படுத்தச் செய்யப்பட்டுள்ள நல்ல தொடக்கமாகும்.”

“தமிழ்நாட்டைச் சீர்படுத்துவதற்கான நல்ல தொடக்கம் இது” : தி.முக அரசுக்கு ‘The Hindu' நாளேடு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டின் நிதி ஆரோக்கியத்தை மனிதாபிமானத்துடன் கூடிய பகுத்தறிவு அணுகுமுறை மேம்படுத்தும் என்று “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

“தி இந்து’’ ஆங்கில நாளேட்டின் நேற்றைய (16.8.2021) இதழில் “கருப்பும் வெள்ளையும்!’’ என்ற தலைப்பிலும் “தமிழ்நாடு தனது நிதி ஆரோக்கியத்தின் மீது செயல்படும்போது நடைமுறைச் செயல்பாட்டு நாட்டமும், அரசியல் தொலைநோக்குப் பார்வையும் இணைவது அவசியமாகும்’’ என்ற துணைத் தலைப்பிலும் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டு நிதி நிலை மீது, வெள்ளை அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்ததன் மூலம் தி.மு.கழக அரசு, இழக்கப்பட்ட நிதிக் கட்டுப்பாட்டைச் சீர்படுத்தச் செய்யப்பட்டுள்ள நல்ல தொடக்கமாகும்.

அதைத் தொடர்ந்து அரசு தன்னுடைய கன்னி நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல் சில்லறை விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. இது தி.மு.கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைப் பகுதி அளவே நிறைவேற்றியுள்ள போதிலும், இது புகழ்ச்சிக்கு உரியதாகும். ஏனெனில் அது நிதி நெருக்கடியாக உள்ள நேரத்தில் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதி அடையாளங்கள், 2013-2014க்குப் பிறகு சிறப்பான வடிவத்தில் காணப்படவில்லை என்பது நன்கு அறியப்பட்டதாகும். இது ஒன்றிய மற்றும் சில மாநில அரசுகளின் ஆவணங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில் நீண்டகாலமாக இழப்பை ஏற்படுத்தி வரும் மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து ஆகிய பயன்பாடுகள் நிலையை மிகவும் மோசமாக்கியே உள்ளன. சரிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒரு கடுமையான நிதிச் சிக்கல் வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறது. இது வெள்ளை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகும். இது சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதில் மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் (எஸ்.ஓ.டி.ஆர்.) இருந்து, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியும் (ஜி.எஸ்.டி.பி.) விகிதப்படி குறைந்துள்ளது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒட்டுமொத்த வரி -மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ஆகிய இரண்டும் கவலைக்குரிய முக்கியப் பகுதிகளாகும். மாநிலத்தின் சொந்த வரிவருவாய் பார்வையில், மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் சுமார் மூன்றில் இரண்டு பங்காகும்.

விரிவுபடுத்தப்படும் வருவாயாலும், நிதிப் பற்றாக்குறைகளாலும் மாநிலம் கடன்கள் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைப்பதாக மாறிவிட்டது. மதிப்பீட்டின்படி ரூ.2,63,976 ஒரு குடும்பத்தின் மீது கடனாக உள்ளது. வெள்ளை அறிக்கையில் முறையான ஆளுமை இல்லாததே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டைச் சீர்படுத்துவதற்கான நல்ல தொடக்கம் இது” : தி.முக அரசுக்கு ‘The Hindu' நாளேடு புகழாரம்!
Admin

குடிநீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உள்ள சிக்கல்களை பெரிதுபடுத்துவதன் மூலம் இந்த ஆவணம், ஏற்கனவே அரசு வரிகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை உயர்த்துமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அது “ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய அமைப்புச் சீர்திருத்தங்கள்” மற்றும் “மானியங்களை மறு ஆற்றுப்படுத்தல் பற்றிக் குறிப்பிடுவதால் அரசு இலக்கு நோக்கிய மானியம் வழங்கல் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதற்கு அறிகுறியாகக் கருதப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை உண்மையில் ஏழைகளாக இருக்கும் குடும்பத் தலைவிகளான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் உருவாக்கப்படும் பாரம்பரிய போட்டி இலவசங்களுக்கும், பொருளாதார முடிவுகளுக்கும் இடையேயும், தேர்தல் அரசியல் பரிசீலனைகளுக்கு இடையேயும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இது புதிய அரசு எவ்வளவு தூரத்துக்கு எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது. முந்தைய அரசின் மீது நிதி நிலைமைக்கு குற்றம்சாட்டிய பிறகு, அரசு நிதி நிலை அறிக்கை மூலம் ஓர் ஒருங்கிணைந்த நிதித் தொடக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு அரசு தயாராக இல்லை என்பதை விளக்கும்போது, பொருளாதாரம் இன்னமும் கோவிட்-19 தாக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சில வரிகளை உயர்த்தியும், சில பகுதிகளில் செலவுகளைச் குறைத்தும் இருந்தால் அரசு செயல்படத் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டியிருக்கும். எப்போது அரசு பயன்பாட்டுக் கட்டணங்களை உயர்த்துவதற்குத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது அத்தகைய நடவடிக்கைகள் சேவைத் தரத்தை உயர்த்துவதோடு ஒத்திருப்பதாகவும் அதற்கேற்ப அதன் தரம் உயர்த்தப்படுவதாகவும் நியாயமான வரி அமைப்புகள் எளிமைப் படுத்துபவையாகவும் இருக்கும்.

இதனை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் “தி இந்து’’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் நலனுக்கான தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கிப் போகாமல் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஒரு மனிதாபிமானத் தொடுதலுடன் கூடிய ஒரு பகுத்தறிவு அணுகுமுறை தமிழ்நாட்டின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தி.மு.கஅரசு தனது தரப்பில் மாநிலத்தின் வளங்களைத் திருப்பிவிடுவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. இவ்வாறு “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories