தமிழ்நாடு

S.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

S.P.வேலுமணி நீட்சியாக சிக்கிய அதிமுக பிரமுகர்; முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளர் வீட்டில் DVAC Raid
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எம்ஜிஆர் நகர் வள்ளல் பாரி தெருவில் உள்ள அதிமுக பிரமுகர் காண்ட்ராக்டர் வெற்றிவேல் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது சென்னை மாநகராட்சியின் கீழ் விடப்பட்ட டென்டர்களில் முறைகேடு தொடர்பாக நடைபெறுவதாகவும் குறிப்பாக வெற்றிவேல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்தார் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் உதவியாளராக தற்போது வரை ஒப்பந்ததாரர் வெற்றிவேல் பணியாற்றி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிமுக பிரமுகர் ஒப்பந்ததாரர் வெற்றிவேல் இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories