தமிழ்நாடு

ஓர் உண்மையான தலைவரின் இலக்கணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார் - ஆழி செந்தில்நாதன் புகழாரம்

10 ஆண்டு காலமாக கீழ்நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த கோட்டினை அவர் தடுத்து நிறுத்தி, அந்தக் கோட்டினை மேல்நோக்கி வளைத்து, இப்போது வளர்ச்சிப் பாதையில் உயர்த்திச் செல்கிறார் என்பது மட்டும் உறுதி.

ஓர் உண்மையான தலைவரின் இலக்கணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார் - ஆழி செந்தில்நாதன் புகழாரம்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று இன்று நாளை வியூகம்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் 100 நாள் ஆட்சி குறித்து – ‘சன் நியூஸ்’ நிகழ்ச்சியில் ஆழி செந்தில்நாதன் புகழாரம் சூட்டினார்.

அவர் எடுத்துரைத்த கருத்துகள் வருமாறு:-

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று நூறு நாட் கள் ஆகின்றன. அதைப்பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி என்கிற வரை படத்தில் பத்தாண்டு காலமாக கீழ்நோக்கி வீழ்ந்து கொண்டிருந்த கோட்டினை அவர் தடுத்து நிறுத்தி, அந்தக் கோட்டினை மேல்நோக்கி வளைத்து, இப்போது வளர்ச்சிப் பாதையில் உயர்த்திச் செல்கிறார் என்பது மட்டும் உறுதி. தமிழ் நாட்டை பலி கொடுத்த அ.தி.மு.க.வின் ஆட்சியால் ஏற்பட்ட வீழ்ச்சியை அவர் நிச்சயமாக இந்த நூறு நாட்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இல்லாதச் சூழலில் இது மிகப்பெரிய சாதனை.

நோயின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டார்!

நேற்று இன்று நாளை என்று சொல்வார்கள். ஓர் உண்மையான தலைவரின் இலக்கணத்தை இங்கே தமிழ்நாட்டு முதல்வர் நிரூபித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகலாம் என்கிற சட்டம் இப்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துவிட்டது. நம்முடைய ஒரு நூற்றாண்டு கால கனவை அவர் இன்று காலை மயிலாப்பூரில் நடந்தக் கூட்டத்தில் ஆன்மீகவாதிகளும் புதிய அர்ச்சகர்களும் நிரம்பியக் கூட்டத்தில் நிறைவேற்றியிருக்கிறார். இதைப்போல நமது நெடுங்கால கோரிக்கைகளை அவர் செயல்படுத்தி வருகிறார்.

நிகழ்காலம் என்று எடுத்துக்கொண்டால், அவர் முதல்வர் பொறுப்பேற்றக் கணத்தில், நாடே கொரானாவால் பாதிக்கப்பட்ட உச்சகட்ட அச்சத்திலிருந்தோம். உறுதியாகப் போராடி அந்த நோயின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்தார்.

தீர்க்கதரிசனமான திட்டம்!

நாளை என்கிற எதிர்காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இதோ நேற்று போடப்பட்ட பட்ஜெட்டைப் பார்ப்போம். அதில் இரண்டு முக்கியமான அம்சங்களைப் பற்றி கவனமீர்க்க விரும்புகிறேன். தொழிலாளர் நலன் மற்றும் திறன் வளர்ப்பு என்கிற தலைப்பின் கீழே, உலகெங்கும் புதிதாக உருவாகி வரும் நான்காம் தொழில் புரட்சிக்கு ஏற்ப நமது தொழிலாளர்களை, இளைஞர்களை தயார்ப்படுத்துவோம் என்று கூறியிருப்பது தீர்க்கதரிசனமான திட்டமாகும். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதைப் போலவே வளர்ச்சியை தமிழ் நாடெங்கும் பரப்பும் விதமாக பட்ஜெட் இருக்கிறது. வேலூரிலும் விழுப்புரத்திலும் டைடல் பார்க் என்பது புரட்சிகரமானதாகும். பின்தங்கிய வட மாவட்டங்களை வளர்ப்பதற்கு இது முக்கியம். அதைப் போலவே சென்னையில் மட்டுமன்றி கோவையும் மதுரையிலும் மெட்ரோ ரயில் குறித்து பேசுவெதல்லாம் மிகவும் முக்கியமானது.

மிகப்பெரிய நம்பிக்கை!

இப்படி நேற்று இன்று நாளை என முக்காலத்துக்கும் அவர் பொறுப்பேற்றிருப்பதைக் காணும்போது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இங்கே பேசிய பா.ம.க. நண்பர் வழக்கறிஞர் பாலு நீட் விஷயத்தில் ஏன் உடனடியாக தீர்வு ஏற்படவில்லை, அதனால் மக்கள் ஏமாந்துபோய் விட்டார்கள் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை ஸ்டாலின் ஏன் கொடுத்தார் என்றும் கேட்கிறார். மனச்சாட்சி இல்லாமல் பேசக்கூடாது. அதுவும் நீட்டைத் திணிக்கும் பா.ஜ.க.வின் கூட்டணியிலிருந்து கொண்டு இதைப் பேசக்கூடாது. தேர்தலின் போது நீட்டை விலக்குவோம் என்று ஒரு வரியில் பேசுகிறோம் என்றால் ஆட்சிப் பொறுப்பேறிய அடுத்த கணமே அதைச் செய்துவிட முடியும் என்று அர்த்தமல்ல. நீட் ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. அரசு நீட்டுக்கு எதிராக இரண்டு மசோதாக்களைப் போட்டது. அதைக் கிடப்பில் போட்டது பா.ஜ.க. அரசு. அ.தி.மு.க. அதைப் பற்றி பேசவோ வலியுறுத்தவோ இல்லை. அப்படியே விட்டுவிட்டது.

‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு!

இதுபோன்ற வழக்குகளில், அரசியல் சாசன ரீதியிலான பிரச்சினைகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பாலுவுக்கு தெரியாதா? Building the case என்று சொல்வார்கள். நாம் வலுவாக, புள்ளியியல் ரீதியில், அரசியல் சாசன ரீதியில் நமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும். அதற்காகத்தான் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பா.ம.க.வும் அந்தக் குழுவிடம் தன் பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறது. மூன்று மாதங்கள்தான் ஆனது இத்தனைக்கும். நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதை மூன்று மாதங்களுக்குள் செய்துவிட முடியாமல் போகிறதென்றால் அதன் சிக்கல் அப்படிப்பட்டது. இந்த நேரத்தில் ‘நீட்’ தேர்வு வருமானால் அதை எப்படித் தடுக்க முடியும்? ஒரு சட்டத்தை மாற்று வதற்கு முன்பு அதை நடைமுறைப்படுத்தவே வேண்டியிருக்கும். ஆனால் சமூக நீதிக்கு எதிரான நீட்டைத் திணிக்கும் மோடி அரசிடம் மல்லுக்கட்டாமல் தி.மு.க. அரசு ஏன் இன்னும் நீட்டை நீக்கவில்லை என்று பேசுவது நியாயமே அற்றது.

அனைவருக்குமான முதல்வராக திகழ்கிறார்!

ஸ்டாலின் அரசு இன்று தன் கூட்டணிக் கட்சிகளின் கோட்பாடுகளையும் சேர்த்தே நடைமுறைப்படுத்துகிறது. இடதுசாரிகள், வி.சி.கவினரின் கோரிக்கைகளை அது ஏற்கிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் தங்களுடைய கனவுத் திட்டம் என்கிறார் டாக்டர் ராமதாஸ். இன்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட் ஜெட்டில் குறிப்பிடப்பட்ட நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பனைவளத் திட்டங்களைப் பார்த்து இதெல்லாம் எங்கள் யோசனைகள் என நாம்தமிழர் கட்சி கூறுகிறது. நல்லதுதானே. அனைவருக்குமான முதல்வராக ஸ்டாலின் இருப்பது சிறப்புதானே. இறுதிக் கருத்தாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இவ்வளவு திட்டங்களும் நன்மைகளும் உருவாக வேண்டுமானால் நமக்கு பணம் வேண்டும், அதை வழி மறித்துக் கொண்டிருப்பது பா.ஜ.க.அரசு. அந்த விவாகாரத்தில் முதல்வர் அதிகமாக போராட வேண்டியிருக்கும். அது நம் அனைவரின் போராட்டம்தான்."

இவ்வாறு ஆழி செந்தில்நாதன் பேசினார்.

banner

Related Stories

Related Stories