தமிழ்நாடு

சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கியுள்ளனர்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்பணி தருவதாக கூறி ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நேற்று சென்னை காவல் ஆணையரிடம் ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்ததார்.

இந்நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது கோவை குனியாமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் தொடங்கி, பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஒப்பந்தப்பணி தருவதாக கூறி ரூ.1.25 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நேற்று சென்னை காவல் ஆணையரிடம் ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்ததார். இந்நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய, சென்னை, திண்டுக்கல், கோவை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், சென்னையில் 15 இடத்திலும், கோவையில் 35 இடங்களிலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி உட்பட 17 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சகோதரர் அன்பரசன், நண்பர்கள் சந்திரபிரகாஷ், சந்திரசேகர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories