தமிழ்நாடு

"அரசு பேருந்து 1 கி.மீ தூரம் ஓடினால் ரூ.59 நஷ்டம்"- கடந்த கால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு அம்பலம்!

அதிமுக அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

"அரசு பேருந்து  1 கி.மீ தூரம் ஓடினால் ரூ.59 நஷ்டம்"- கடந்த கால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், அதிமுக அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் மின்துறையும், போக்குவரத்துத் துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது.

வாங்கிய கடன்களுக்காகத் தமிழ்நாடு அரசு ஒருநாள் வட்டியாக ரூ.87.31 கோடி செலுத்தி வருகிறது. மின்சாரத்துறையில் பல பிரச்சனைகள் உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கி பயன்படுத்தினால் 2.36 பைசா இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் ரூ.31.50யை ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மட்டும் ரூ,20,000 கோடி நிலுவையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories