தமிழ்நாடு

கோவையில் விவசாயத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் திட்டம்? சுற்றுச்சூழல் அணி செயலர் சொல்லும் தகவல்!

கோவையில் சுத்திக்கரிக்கப்பட்ட கழிவுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் திட்டம் குறித்து கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் மாநில திட்டக்குழு துணைத்தலைவரை சந்தித்து முறையீடு.

கோவையில் விவசாயத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் திட்டம்? சுற்றுச்சூழல் அணி செயலர் சொல்லும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வேளாண்மைக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கோரி திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஏற்பாட்டில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ ஜெயரஞ்சனை அந்த குழுவினர் சந்தித்தனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வெளிவரும் கழிவுநீரை சுத்திகரித்து, அந்நீரை அப்பகுதியில் உள்ள 300 விவசாயிகளின் நிலங்களில் பயன்படுத்தும் திட்டத்தை அங்குள்ள மக்கள் சில மாதங்களுக்கு முன்பாக பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்திற்கு அரசின் ஆதரவும், சில சலுகைகளும் தேவைப்பட்ட காரணத்தால் திட்டம் பற்றிய முழுமையான தகவலை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களிடம் தெரிவித்தோம்.

சம்மந்தப்பட்ட துறைக்கு இத்தகவலை கொண்டு செல்வதாகவும், வருகின்ற நிதிநிலை அறிக்கை அல்லது அடுத்த வருட நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெறச் செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.

இந்த நன்முயற்சியை மேற்கொண்டுள்ள ஐயா புருஷோத்தமன் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் கழக சுற்றுச்சூழல் அணியின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories